உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பிய கும்பலாங்கி நைட்ஸ் இயக்குநர்

7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பிய கும்பலாங்கி நைட்ஸ் இயக்குநர்

மலையாளத்தில் கடந்த 2019ல் வெளியான படம் கும்பலாங்கி நைட்ஸ். நடிகர் பஹத் பாசில் இதில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்தனர். நடிகை அன்னா பென் கதாநாயகியாக இதில் தான் அறிமுகமானார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தை இயக்குநர் மது சி. நாராயணன் இயக்கி இருந்தார். ஆனாலும் கடந்த ஏழு வருடங்களாக இவர் தனது அடுத்த படத்தை தொடங்கவே இல்லை.

இந்த நிலையில், அடுத்ததாக இவர் இசையை மையப்படுத்தி புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.. இதில் பிரேமலு புகழ் நடிகர் நஸ்லேன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ரெக்ஸ் விஜயன் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன..

இப்படித்தான் பிரேமம் படம் வெளியான பிறகு அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேல் அதன் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் அடுத்த படம் இயக்காமல் இருந்தார். அது அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.. அந்த வகையில் இயக்குநர் மது சி. நாராயணனுக்கு இந்த இடைவெளி, முதல் படத்தின் வெற்றியைத் தக்கவைக்க உதவுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !