உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாணின் 'ஓஜி- 2'! வதந்தியில் சிக்கிய பூஜா ஹெக்டே!

பவன் கல்யாணின் 'ஓஜி- 2'! வதந்தியில் சிக்கிய பூஜா ஹெக்டே!


கடந்த 2025ல் தெலுங்கில் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வெளியான படம் 'ஓஜி'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்தார். 200 கோடியில் தயாரான இப்படம் 300 கோடி வரை வசூலித்தது. இந்நிலையில் அடுத்து ஓஜி படத்தின் இரண்டாம் பாகத்திலும் சுஜித் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் பவன் கல்யாண். இயக்குனர் சுஜித் அண்மையில் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக ஒருதகவல் வெளியிட்டிருந்தார். இது பவன் கல்யாண் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த நேரத்தில் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவின. இந்த செய்திக்கு ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இந்த 'ஓஜி -2' படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவில்லை. வெளியான செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இப்படம் குறித்த முக்கியமான அறிவிப்புகள் தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஓஜி-2 படத்தை பவன் கல்யாண் கிரியேட்டிவ் வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்க, தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இதன் திரைக்கதை எழுதும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதற்கு முன்பு பவன் கல்யாணின் 'உஸ்தாத் பகத் சிங்' படத்திலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் கால்ஷீட் காரணங்களால் அது தள்ளிப்போனது. தற்போது ஓஜி-2 பட வதந்தியும் பொய்யானதால், பவன் கல்யாண் - பூஜா ஹெக்டே கூட்டணியை திரையில் பார்க்க ரசிகர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். மேலும், பூஜா ஹெக்டே தற்போது தமிழில் 'காஞ்சனா-4' மற்றும் பாலிவுட்டில் ஷாஹித் கபூருடன் 'தேவா' என்ற படத்திலும், தெலுங்கில் துல்கர் சல்மானின் 41வது படத்திலும் நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !