உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மமிதா பைஜுவின் வளர்ச்சியைப் பாராட்டிய ஐஸ்வர்யா லட்சுமி!

மமிதா பைஜுவின் வளர்ச்சியைப் பாராட்டிய ஐஸ்வர்யா லட்சுமி!


தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் மமிதா பைஜுவின் அர்ப்பணிப்பையும் வளர்ச்சியையும் பார்த்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மமிதாவின் இந்த அசுர வளர்ச்சி, பார்ப்பதற்கு தனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மமிதா பைஜூ எனக்கு ஒரு குழந்தை மாதிரி, மிகவும் அற்புதமாக நடிக்கிறார். சூர்யா சாருடன் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரீல்ஸ் வீடியோக்களை நான் பார்த்தேன். அதில் மமிதா மிகவும் நேர்த்தியாக, சூப்பராக நடனம் ஆடியுள்ளார். அதைப் பார்க்கவே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சினிமாத்துறையில் இது போன்ற பெரிய வாய்ப்புகள் மிகச் சிலருக்கே கிடைக்கும். அப்படி நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

மேலும், சினிமாவில் இவ்வளவு பெரிய பிரபலமாக வளர்ந்து வந்தாலும், மமிதா இன்னும் மிக எளிய மனிதராகவே இருக்கிறார் . அவர் செட்டுக்கு வருவார், தன் வேலையைச் செய்வார், கிளம்பிவிடுவார். அங்கு இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பேசுவார். அவரிடம் எவ்விதமான ஸ்டார் ஆட்டிடியூடும் கிடையாது. மமிதாவிடம் எனக்கு மிகவும் பிடித்தமான குணம் அதுதான் என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

ஏற்கனவே தமிழில் 'ஜகமே தந்திரம், கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, தக்லைப்' ஆகிய படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து 'காட்டா குஸ்தி -2' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 3ம் தேதி திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !