ராஜமவுலி, மகேஷ்பாபு சண்டை ; ராம் கோபால் வர்மா பகிர்ந்த வைரல் வீடியோ
சமீப காலமாக சினிமாவில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல படங்களில் சில காட்சிகளோ அல்லது நடித்திருப்பவர்களோ கூட எது ஒரிஜினல் எது ஏ ஐ என்று சொல்ல முடியாத அளவிற்கு இந்த தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் சினிமா செத்துவிடும் என்று ஒரு கருத்தை கூறி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
அந்த வீடியோவில் இயக்குனர் ராஜமவுலியும் மகேஷ்பாபுவும் ஒருவருக்கொருவர் பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்வது போல காட்சிகள் அமைந்துள்ளன. பார்ப்பதற்கு இருவரும் படப்பிடிப்பு தளத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வது போல் தத்ரூபமாக அங்கு சண்டைக் காட்சி இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தால் இப்படி கூட காட்சிகளை உருவாக்க முடியும் என்றால் சினிமா விரைவில் செத்துவிடும் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறுவதை ஆமோதிக்க தான் வேண்டியிருக்கிறது.