உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன்

'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன்


ரவி மோகன் தயாரித்து நடிக்கும் படம் 'ப்ரோ கோட்'. கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், 'ப்ரோ கோட்' என்ற பெயருக்கு தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதை பயன்படுத்தக் கூடாது என்று டில்லியை சேர்ந்த இண்டோ பேவ்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் தரப்பில் ரவி மோகடனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, 'ப்ரோ கோட்' படத்தின் தலைப்பை தனது படத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என்று மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் கலந்து பேசி சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !