உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தஞ்சை சிறையில் தயாரான படம்

பிளாஷ்பேக்: தஞ்சை சிறையில் தயாரான படம்


தற்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தாணுவுடன் இணைந்து சினிமாவில் பயணித்தவர் ஜி.சேகரன். 'யார்' படத்தை தாணுவுடன் சேர்ந்து தயாரித்து இருந்தார். யார் படம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூலை அள்ளிக்கொடுத்தது. அதற்கு பின்பு பாண்டியராஜனை வைத்து முதல் முறையாக இயக்கிய படம்தான் 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்'. இந்த படத்தை ஜி சேகரன் இயக்கியதோடு மட்டுமல்லாமல் படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக நடித்து இருந்தார்.

பாண்டியராஜன், செந்தில், சார்லி, சின்னி ஜெயந்த், கிங்காங், லூஸ் மோகன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கிங்காங் இப்படத்தில்தான் அறிமுகமானார். பாண்டியராஜனுக்கு ஜோடியாக பல்லவி நடித்திருந்தார். மலேசியா வாசுதேவன் ஏற்காடு சுப்ரமணியன் என்ற என்ற பெயரில் வில்லனாக நடித்தார். ஜெய்சங்கர், எஸ்.எஸ் சந்திரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். 'சதுரங்க வேட்டை' பாணியிலான மோசடிகளை மையமாக வைத்து உருவான படம்.

படத்தில் ஏராளமான சிறைச்சாலை காட்சிகள் இருந்தது. இந்த காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் தஞ்சை சிறைச்சாலையில் படமாக்கப்பட்டது. தஞ்சாவூர் சிறையில் படமாக்கப்பட்ட ஒரே படம் இதுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !