வாசகர்கள் கருத்துகள் (2)
எப்படி, அடிக்கடி கட்சிமாறுவது. அப்படியா?
ஜோடி சேர்ந்து நடிக்க முயற்சி செய்யவும்... அம்மாவை போல பேமஸ் ஆகிவிடலாம்.
குஷ்பு, சுந்தர் சி தம்பதிகளின் இரண்டாவது மகள் அவந்திகா நடிகை ஆகிவிட்டார். வெளிநாட்டில் நடிப்பு பயிற்சி பெற்று திரும்பி உள்ள அவர் 'ஆரம்பம்' என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அதோடு தமிழில் 'டபுள் ஆக்குபன்சி' என்ற படத்திலும் நடித்து வருகிறது.
நடிக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் நடிகை ஆகப்போகிறேன் என்று சொன்னதும், அம்மாவும் அப்பாவும் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். சினிமா சாதாரண விஷயம் இல்லை. கொஞ்சம் கடினமானது பார்த்துக் கொள் என்று மட்டும் அறிவுரை சொன்னார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே நான் நடிக்க தயார் ஆகிவிட்டேன். உடம்பை ஸ்லிமாக்கி, நடிப்பு பயிற்சி பெற்று தயாரான பிறகுதான் வாய்ப்பு தேடினேன்.
அப்பா அம்மா சொன்ன மாதிரி சினிமாவை சீரியசாக எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். சில வருடங்கள் என்னை அம்மாவோடு ஒப்பிடுவார்கள். இதனை தவிர்க்க முடியாது. அம்மாவிற்கு கிடைத்த மாதிரியான கேரக்டர்கள் எனக்கு கிடைக்க வேண்டும், அவர்கள் கொடுத்த உழைப்பு, அக்கறையை நானும் கொடுக்க வேண்டும்.
அம்மாவின் ஜீன் என்னிடம் உள்ளது. அதோடு நான் கடுமையாக உழைக்கும்போது அம்மா இடத்திற்கு வர முடியும் என்று நினைக்கிறேன். அப்பா அம்மா என் விஷயத்தில் தலையிடாமல் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். நானே கதை கேட்கிறேன். நானே முடிவு செய்கிறேன். மக்களுக்கு பிடித்த நல்ல நடிகையாக நிச்சயம் வருவேன். அதற்காக கடினமாக உழைப்பேன், என்கிறார்.
எப்படி, அடிக்கடி கட்சிமாறுவது. அப்படியா?
ஜோடி சேர்ந்து நடிக்க முயற்சி செய்யவும்... அம்மாவை போல பேமஸ் ஆகிவிடலாம்.