உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன்

தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன்


பெங்களூரு பொண்ணு பிரியங்கா மோகன் கன்னட படத்தில் அறிமுமாகி, தெலுங்கு படங்களில் நடித்து, 'டாக்டர்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர். அதன்பிறகு 'எதற்கும் துணிந்தவன், டான், டிக்டிக், கேப்டன் மில்லர்' படங்களில் நடித்தார்.

தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஓஜி' படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்தவர் சிறிய இடைவெளிக்கு பிறகு 'மேட் இன் கொரியா' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

இதுகுறித்து பிரியங்கா மோகன் கூறியிருப்பதாவது: தமிழ் படங்களுக்கு இடைவெளி விழுந்து விட்டதாக கருதவில்லை. தொடர்ந்து கதை கேட்டு வருகிறேன் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இப்போதுகூட கவினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.

'மேட் இன் கொரியா' என் மனசுக்கு நெருக்கமான படம். தமிழர்களுக்கும், கொரியன்களுக்கும் பண்பாட்டு கலாச்சார ரீதியாக நல்ல நெருக்கம் உண்டு. பாண்டிய நாட்டு இளவரசி ஒருவர் கொரியா சென்று அங்குள்ள இளவரசரை திருமணம் செய்து கொண்டு அங்கு தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் அவர் பரப்பியதாக கூறுகிறார்கள். அந்த இளவரசிக்கு அங்கு கல்லறை இருக்கிறது. அங்கு சென்று நாங்கள் பார்த்தோம். இந்த வரலாற்று சம்பவத்தை இன்றை சமூகத்தோடு இணைத்து உருவாகி உள்ள படம்.

உலக நாடுகள் அனைத்தையும் சுற்றி பார்க்க நினைக்கும் ஒரு தமிழ் பெண் கொரியாவுக்கு செல்கிறாள். அங்கு அவள் சந்திக்கிற பிரச்னைகள்தான் படத்தின் கதை.தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தாலும் தமிழிலும் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் பிரியங்கா மோகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !