உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுபமாவை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்த வைத்த அதிர்ச்சி சம்பவம்

அனுபமாவை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்த வைத்த அதிர்ச்சி சம்பவம்

மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தை விட தமிழ், தெலுங்கில் தான் அதிக அளவில் படங்கலில் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு ரசிகர்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் அசைவ உணவு சாப்பிடுவது பற்றி அவர் கூறும்போது, மட்டன் சாப்பிட்டே நான்கு வருடங்கள் ஆகிவிட்டது என்றும் மட்டன் சாப்பிடுவதையே தான் நிறுத்த காரணமாக அமைந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டும் பேசினார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் கார்த்திகேயா 2 என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்த படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் ஆடுகளை வளர்க்கும் பட்டி இருந்தது. படப்பிடிப்பு இடைவெளியில் அங்கிருந்த ஆடுகளுடன் நான் விளையாடுவது வழக்கம். ஒரு நாள் எங்களுக்கு படப்பிடிப்பில் மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது. அன்று மாலை தான் என்னுடைய உதவியாளர் மூலமாக மதியம் பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணிக்கு நான் எந்த ஆட்டுடன் விளையாடிக் கொண்டிருந்தேனோ அதையே வெட்டி உணவாக்கி இருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரிய வந்தது. அன்று முழுதும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. அன்றைய தினத்திலிருந்து நான் இப்போது வரை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன். இப்போதும் கூட அந்த சம்பவம் என்னை சில நேரங்களில் அப்செட் ஆக்கி விடுகிறது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !