உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கும் மாதுரி ஜெயின்

5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கும் மாதுரி ஜெயின்


'மிஸ் சவுத் இந்தியா' 2017 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் மாதுரி ஜெயின். மாடல் அழகியாக இருந்த இவர் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 2021ல் வெளிவந்த 'பூமிகா' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதே ஆண்டில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கிய 'சிவகுமாரின் சபதம்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். 'டிரிபிள்ஸ்' என்ற வெப் தொடரிலும் நடித்தார்.

தற்போது அவர் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'மென்டல் மனதில்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !