உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஹிந்தி நடிகை?

விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஹிந்தி நடிகை?


'ஹாய் நானா' பட இயக்குனர் சவுர்யுவ் அடுத்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும், இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு, பிரபாஸ் என இருவருடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !