உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு

'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு


உலகில் டாப் 5 வெப் தொடர்களில் ஒன்று 'கேம் ஆப் த்ரோன்ஸ்'. இதுவரை 8 சீசன்களாக 73 எபிபோட்கள் வெளியானது. எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, சரித்திர காலத்தை கண்முன் நிறுத்தும் காட்சி அமைப்புகள், நச்சென்ற வசனங்கள், அதோடு அவ்வப்போது வரும் அடல்ட் கன்டன்ட் காட்சிகள் இதுதான் இந்த தொடரின் சிறப்பு.

இந்த தொடரின் புதிய பாகமாக வெளிவந்துள்ளது 'ஏ நைட் ஆப் தி செவன் கிங்டம்' என்ற தொடர். டிராகன்கள், மாயாஜாலம், அரியணைக்கான போட்டி, அடல்ட் கன்டன்ட் காட்சி என்று எதுவும் இல்லாத ஓர் எளிய வீரனின் கதையாக இந்த தொடர் வெளிவந்துள்ளது.

'கேம் ஆப் த்ரோன்ஸ்' கதை நடந்த காலத்தில் இருந்து 100 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதையாக சொல்லப்படுகிறது. ஆர்.ஆர்.ஜார்ஜ் எழுதிய 'டேல்ஸ் ஆப் டிரங் அண்ட் எக்' என்ற நாவலை தழுவி உருவாகி உள்ளது. இரா பர்கர், ஜார்ஜ் மார்ட்டின் இணைந்து இயக்கி உள்ளனர். பீட்டர் கிளபி நாயகனாக நடித்துள்ளார். 30 முதல் 40 நிமிட நீளத்தை கொண்ட 6 எபிசோட்களாக எச்பிஓ தளத்தில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !