உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை'

ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை'


கதிர், திவ்யபாரதி நடித்து வரும் படம் 'ஆசை'. சுதன் சுந்தரம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூர்ணா, லிங்கா, அலெக்ஸாண்டர் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் இசை அமைப்பாளர் ரேவா இசை அமைக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் ஷிவ் மோஹா கூறும்போது “'ஹீரோயின் பிறந்தநாளின்போது சின்ன விஷயத்துக்கு ஆசைப்பட்டு ஒரு காரியத்தை செய்யப்போய், அது காதலர்கள் இருவரையும் எவ்வளவு தூரத்துக்கு இழுத்துப்போகிறது, அடுத்தடுத்து அவர்கள் எப்படிப் பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டவிதம் எப்படி என்பதுதான் கதை.

இது ஒரு ரொமான்டிக் திரில்லர் படம். இந்த கதைக்கு பல தலைப்புகள் யோசித்தும் 'ஆசை' என்கிற தலைப்புதான் பொருத்தமாக வந்து நின்றது. அஜித் நடித்த 'ஆசை' படத்தின் தயாரிப்பாளரிடம் முறைப்படி அனுமதி வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம்.” என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !