உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம்

என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம்


தமிழ் திரையுலகில் சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் இருந்தாலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரச்சிதா அளித்த பேட்டியில் சமூக வலைதளங்களில் பரவி வரும் மார்ப்பிங் போட்டோக்கள் குறித்து கூறியுள்ளார். அதன்படி, என்னுடைய போட்டோக்களை மார்ப் பண்ணி பதிவு செய்கிறார்கள். கடந்த வாரத்தில் வெள்ளை சட்டை, பர்ப்பிள் டி-ஷர்ட் அணிந்து ஒரு போட்டோவை பதிவிட்டேன். அதனை ஆடை இல்லாமல் ஆபாசமாக மார்பிங் செய்து பதிவு செய்கிறார்கள்.
ஒரு நடிகையாக இதை எங்க ஸ்டாப் பண்றதுன்னு எனக்கு தெரியவில்லை. நான் போட்டோக்கள் பதிவிடுவதை நிறுத்தணுமா, அல்லது நாங்கள் வெளியே வருவதையே நிறுத்தணுமா? நான் ப்ளாக் செய்தால் எனக்கு மட்டும் தானே தெரியாது. ஆனால், மற்றவர்கள் அதனை பார்ப்பார்கள். அதை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக உள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !