உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்

என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் வெளியாகி உள்ள ‛தாய் கிழவி' படம் வரவேற்பை பெற்றுள்ளது. 10 நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. சென்னையில் நடந்த தாய்கிழவி பட வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது...

நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவது முக்கியமான விஷயம். நம்மை சுற்றி பிரச்னைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அதற்கு இடையே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் எப்போதுமே நல்ல ரசிகனாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்தின் மூலம் எனக்கு பொறுப்புணர்வு கூடியிருக்கிறது.

என் அம்மா, அக்கா, மனைவி ஆகியோரை பவுனுத்தாய் கதாபாத்திரம் நினைவூட்டியது. சிறிய வருமானத்தை கூட சேமித்து அதை பெரிதாக்கும் அம்மா, அக்கா, மனைவி என அனைத்து பெண்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம். இப்போதும் என் மனைவிதான் என் வீட்டு கணக்கு வழக்குகள் பார்க்கிறார். வெளியூர் சென்றால் அவரிடம் தான் பணம் கேட்கிறேன்.

இந்த படத்தில் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். கற்றல் மட்டுமே கடைசி வரைக்கும் மாறாது. இந்த படத்தின் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டதை வைத்தே இனி என் படங்களில் நடிக்கப்போகிறேன். அதற்காக இயக்குநரின் முடிவுகளில் தலையிட மாட்டேன். சில வரைமுறைகளுக்கு உட்பட்டு படங்களில் நடிக்கப்போகிறேன். ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்ததால் இந்த படம் வெற்றி பெற்றது.

தொடர்ந்து என் நிறுவனம் சார்பில் நல்ல படங்கள் தயாரிக்க போகிறேன். கனா, அமரன், தாய் கிழவி மாதிரியான படங்கள் நிறைவு தருகிறது. சிவகுமார் முருகேசன் நான் இணையும் படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. வசூல், எண்ணிக்கை தாண்டி இந்த படம் நல்ல நிறைவு.

தாய் கிழவி பட ப்ரிவியூ காட்சியை பார்த்தபோது இயக்குனர் சிவகுமார் முருகேசன் தந்தை என்னையும், மகன் சிவகுமாரையும் கட்டிப்பிடித்தார். அந்த தருணத்தில் என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக் கொண்டேன் எனக் கூறி கண்கலங்கினார் சிவகார்த்திகேயன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

தமிழ் நாட்டு அறிவாளி, Chennai
2026-03-11 16:20:52

சும்மா அப்பா வந்தார் அது இதுனு கதை விடவேண்டாம். படம் ஓடணும் னு அதுல என்ன இருக்கோ அதை மட்டும் பேசவேண்டும்.