நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது
நட்புன்னா என்னான்னு தெரியுமா, ஸ்டார், டாடா, மாஸ்க் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கவின். தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் என்ற படத்தில் நாயகனாக நடிக்க, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். அவர்களுடன் பிரபு, கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை ஒரு இளைஞன் காதலிக்கும் கதையில் உருவாகி இருக்கிறது. இந்த காதலை அந்த பெண் ஏற்றுக் கொண்டாளா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை கருவாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று இப்படத்தில் கவின் - நயன்தாரா இடம்பெற்றுள்ள ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு அந்த போஸ்டரில் ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆன் தி வே என குறிப்பிட்டுள்ளனர். விரைவில் படத்தின் பாடல், அல்லது டீசர், பட வெளியீடு தொடர்பான ஏதாவது அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.