உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா!

விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா!


நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விஜய்க்கும் ஒரு நடிகைக்குமிடையே உறவு இருப்பதாகவும், தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இப்படி அவர் மனு தாக்கல் செய்த சில தினங்களிலேயே சென்னையில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜயும், திரிஷாவும் ஒரே காரில் வந்து ஜோடியாக கலந்து கொண்டார்கள். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அதன் பிறகு, பார்த்திபன் சொன்ன குந்தவை விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் திரிஷா. இப்படியான நிலையில் இன்று சென்னை விமான நிலையத்துக்கு சென்ற திரிஷாவிடம், விஜயுடன் நீங்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்றது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்களே என்று மீடியாக்கள் கேள்வி கேட்டார்கள். ஆனால், அப்படியொரு கேள்வி கேட்டதுமே வேறு பக்கமாக திரும்பிக்கொண்ட திரிஷா, அதன் பிறகு மீண்டும் மீண்டும் மீடியாக்கள் அதே கேள்வியை கேட்டு மைக்கை தன்னை நோக்கி நீட்டியபோது, எந்த பதிலும் கொடுக்காமல் மவுனமாக அவர்களை கடந்து சென்று விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !