உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛மகாராஜா 2' கதை தயார் ; உறுதிப்படுத்திய விஜய்சேதுபதி

‛மகாராஜா 2' கதை தயார் ; உறுதிப்படுத்திய விஜய்சேதுபதி


தற்போது விஜய்சேதுபதி இயக்குனர்கள் மணிரத்னம், தியாகராஜன் குமாரராஜா, பூரி ஜெகன்நாத் மற்றும் காக்கா முட்டை மணிகண்டன் ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார். மிஸ்கின் இயக்கத்தில் ஏற்கனவே இவர் நடித்துள்ள ட்ரெயின் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2024 நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி வசூல் படம் என்கிற பெயரையும் அவருக்கு பெற்று தந்தது.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாக்கம் நடைபெற்று வருவதாக பல மாதங்களாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதி அதை உறுதிப்படுத்தியுள்ளார், நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட்டை முடித்து விட்டார். விரைவில் அதை கேட்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !