18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ்
இது ரீ ரிலீஸ் சீசன். ரஜினி, கமல், விஜய், அஜித், படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அந்த வகையில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான, ரவி மோகனின் “தாம் தூம்” படம் ஏப்ரல் 10 ரீ ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள், அழகான காதல் காட்சிகள் அந்த காலத்தில் பேசப்பட்டன.
இன்று எம்பி ஆக இருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. அந்த காலத்தில் ஹிட் பட்டியலில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவாகி இருந்தது “தாம் தூம்”
18 ஆண்டுகளுக்குப் பிறகு, “தாம் தூம்” படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலீஸ் ஆகிறது.