உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து

சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து


வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் படம் அரசன். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீப காலமாக ஒரு தேக்க நிலை காணப்பட்டது. அதன் பிறகு தற்போது வெற்றிமாறன் சிம்பு இருவரும் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கி சுமூகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு அது குறித்த டீசர் ஒன்றும் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் அவர் ஜெயிலர் படத்தின் பணிகளை ஒரு பக்கம் கவனித்துக்கொண்டே இன்னொரு பக்கம் ரஜினி, கமல் நடிக்கும் புதிய படத்தின் வேலைகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால் இந்த படத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். அதற்கு பதிலாக டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. டிராகன் படத்தை தொடர்ந்து அவர் சிம்புவின் படத்தை இயக்குவதாக ஒரு அறிவிப்பு வெளியான நிலையில், இப்போது சிம்பு நடிக்கும் படத்திலேயே அவர் ஒரு நடிகராக இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !