வாசகர்கள் கருத்துகள் (1)
நல்லவேளை இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை, இசை அமைத்து இருந்தால் அதுக்கும் ராய்லட்டி கேட்டிருப்பார்.
டேனி பாய்ல் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தேவ் பட்டேல், ப்ரீத்தா பின்டோ, மதுர் மிட்டல், அனில் கபூர் மற்றும் பலர் நடிப்பில் 2009ல் வெளியான ஆங்கிலப் படம் 'ஸ்லம்டாக் மில்லியனர்'.
81வது ஆஸ்கர் விருதுகளில் அப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை, சிறந்த பாடல், ஒலிக் கலவை என 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
அந்தப் படத்தில் நடித்ததற்காக தற்போதும் பணம் பெற்று வருவதாக சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார்.
“இத்தனை வருடங்களாகிவிட்டது, இப்போதும் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக நான் பணம் பெற்று வருகிறேன். நேற்று கூட எனக்கு 3000 பவுண்டுகள் செக் வந்தது. நான் வரியைக் கட்டுவதால் இதைத் தயக்கமின்றி சொல்வேன். இதுவரையில் மொத்தமாக அரை மில்லியன் பவுண்டுகள் எனக்கு வந்துள்ளது. இதை நான் அவர்களிடம் கேட்கவில்லை, அவர்களாகத் தந்து வருகிறார்கள்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “கற்றுக் கொள்வதற்காகவே அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். அவர்கள் என்னை சந்தித்த போது எனக்கான சம்பளத்தைத் தரும் நிலையில் இல்லை என்றார்கள். நான் உங்களிடம் அது பற்றிப் பேசினேனே என்று கேட்டேன். உங்களுக்கு பணம் வாங்காமல் நடித்துத் தருகிறேன் என்றேன். இதை அவர்களாகவே தற்போது தந்து வருகிறார்கள்” எனக் கூறினார்.
ஆங்கிலேயே நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் அவர்களது வியாபார முறைப்படி லாபத்தில் பங்கு அல்லது ராயல் முறை சம்பளம் என்பதை அனில் கபூரின் ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளார்கள். அதனால்தான் அவர் தற்போதும் அதற்கான தொகையைப் பெற்று வருகிறார்.
நல்லவேளை இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை, இசை அமைத்து இருந்தால் அதுக்கும் ராய்லட்டி கேட்டிருப்பார்.