அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருப்பு'. இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
சூர்யா அடுத்து நடித்து வந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து நேற்று அப்படத்தின் டீசரையும் வெளியிட்டு விட்டார்கள். அதில் படம் ஜுலை மாதம் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக சூர்யா பதிவிட்டிருந்ததை மறுபதிவு செய்து வாழ்த்தியுள்ள 'கருப்பு' இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, “சார்... சஞ்சய் விஸ்வநாத் மற்றும் அன்பான ரசிகர்கள்… அடுத்த திங்கள்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அடுத்த திங்களன்று 'கருப்பு' படத்தின் வெளியீடு பற்றி அறிவிக்க உள்ளார்கள் என்பது தெரிகிறது. மே 15ம் தேதி 'கருப்பு' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் வந்துள்ளன.