உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்'

''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்'


சமீபத்தில் நடிகர் விஜயின் 'தவெக' கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின்போது, அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கிய காரணம் குறித்து பேசியிருந்தார். அதில், 'நடிகர் ரஜினி திமுக.,வின் மிரட்டலுக்கு பயந்துதான் அரசியல் பயணத்தை கைவிட்டார். ஆனால், விஜய் அப்படியில்லை, எந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்' எனப்பேசியிருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல், பாஜ.,வின் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி கூறியிருப்பதாவது: தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அவருடையஅவதூறுக் கருத்தை கண்டித்து, எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும். இவ்வாறு தனக்காக குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !