உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ்

பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியவர் கீர்த்தி சுரேஷ். அதுவும் அவர் தேசிய விருது பெற்ற பிறகு எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமானது. என்றாலும் அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.

'தெறி' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அட்லி தயாரித்த இந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இதனால் கீர்திக்கு பாலிவுட் கதவும் மூடப்பட்டது. என்றாலும் இன்னொரு வாய்ப்பாக தற்போது 'ரப்தார்' என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்துள்ள இதில் அனுராக் தாக்கூர், ரோஹன் வர்மா, தான்யா மணிக்தலா, ரஜத் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“லட்சிய வெறி கொண்ட ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான உறவையும் மையப்படுத்திய கதை இது. பணம், அதிகாரம், பேராசை ஆகியவை பெருகும்போது, வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களது தாகம் காதலோடு மோதத் தொடங்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று படம் சொல்லும். இந்தியாவின் வணிகக் கல்வி முறையை காமெடியாகவும், அறிவை விதைக்க வேண்டிய கல்வி எப்படி வணிக மயமானது என்பதையும் இப்படம் பேசும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

'செக்டார் 36' படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவின் மனைவி பத்ர லேகா, தனது கம்பா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். ஜூலை 24ல் திரை அரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேபி ஜானில் விட்ட இடத்தை ரப்தார் மூலம் கீர்த்தி மீட்பாரா என்பதுதான் அவரது ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !