உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள்

கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள்


விரைவில் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. பொதுவாக இந்த சீசனில் அதிக படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால், இந்த சீசனில் ரஜினி, கமல், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. விஜய் நடித்த 'ஜனநாயகன்' வரும் என்று தெரிகிறது. அதேபோல், சூர்யாவின் 'கருப்பு' மே மாதம் ரிலீஸ் ஆகிறது. லெஜண்ட் சரவணன் நடித்த 'லீடர்' படமும் சம்மரில் வருகிறது.

இந்த படங்கள் தவிர, தனுசின் 'கர', பரத் நடித்த 'காளிதாஸ் 2', ரவி மோகனின் 'கராத்தே பாபு', அதர்வாவின் 'இதயம் முரளி', அருள்நிதியின் 'டிமாண்டி காலனி 3' மற்றும் 'மை டியர் சிஸ்டர்', ஹிப்ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு 2', செல்வராகவனின் 'மனிதன் தெய்வமாகலாம்', விஜய் மகனின் 'சிக்மா', பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே', நயன்தாரா, கவின் நடித்த 'ஹாய்', மற்றும் 'அன்பே டயனா, மிஸ்டர் எக்ஸ்' படங்களும் வர தயாராக இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !