புதிய உலக சாதனை படைத்த 'ஸ்பைடர் மேன் ; பிராண்ட் நியூ டே' டிரைலர்
டெஸ்டின் டேனியர் க்ரெட்டோன் இயக்கத்தில், டாம் ஹாலந்த், ஜென்டயா, சாடி சின்க் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே' படத்தின் டிரைலர் மார்ச் 18ம் தேதி வெளியானது. டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 718 மில்லியன் பார்வைகளை மொத்தமாகப் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
பல்வேறு யு டியூப் தளங்களில் 398 மில்லியன் பார்வைகளை, டிக் டாக் தளத்தில் 170 மில்லியன், இன்ஸ்டாகிராம் தளத்தில் 91 மில்லியன், எக்ஸ் தளத்தில் 31 மில்லியன், பேஸ்புக் மற்றும் இதர தளங்களில் 27 மில்லியன் பார்வைகள் என மொத்தமாக 718 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
உலக அளவிலான மொத்த பார்வைகளில் இந்தியாவில் மட்டும் 151 மில்லியன் பார்வைகளைக் கடந்து 21 சதவீத பங்களிப்பைக் கொடுத்துள்ளது. அடுத்த இடத்தில் அமெரிக்காவில் 119 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஜுலை 31ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.