வாசகர்கள் கருத்துகள் (1)
நல்ல முடிவு தலைவா?
நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா 'காதலன்' படத்தின் மூலம் ஹீரோ ஆனார். தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்த பிரபுதேவா இரண்டு தெலுங்கு படங்களை இயக்கி விட்டு தமிழில் 'போக்கிரி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.
'வாண்டட்' படத்தின் மூலம் பாலிவுட் இயக்குனரான பிரபுதேவா, ரவுடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்சன், சிங் இ பிலிங், டபாங் 3 உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் ஒன்றிரண்டை தவிர மற்ற படங்கள் தோல்வி அடையவே அவர் கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட்டில் படம் எதுவும் இயக்கவில்லை. மீண்டும் தமிழுக்கு வந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் முன்பு பாலிவுட்டில் பிசியாக இருந்தபோது தெற்கு மும்பையில் மகாலட்சுமி பகுதியில் பிரமாண்ட அபார்ட்மென்ட்டில் இரண்டு வீடுகளை வாங்கியிருந்தார். 2012ம் ஆண்டு வாங்கிய இந்த வீடுகளை இப்போது அவர் 14.80 கோடிக்கு விற்றிருக்கிறார்.
தற்போது தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருவதாலும், தனது மகனை தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாலும் சென்னையிலேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளதால் மும்பை வீடுகளை விற்றிருப்பதாக கூறப்படுகிறது.
நல்ல முடிவு தலைவா?