உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெமினி தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்திற்கு இன்ஸ்பிரசேன் : சரண்

ஜெமினி தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்திற்கு இன்ஸ்பிரசேன் : சரண்

இயக்குனர் சரண் தமிழில் காதல் மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் , அட்டகாசம், ஜெமினி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சமீபத்தில் ஒரு பேட்டியில் வசூல்ராஜா படத்தை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது,ஜெமினி படத்தில் ரவுடி படிக்க காலேஜ் போகிறான். அதேதான் முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தின் ஒன் லைன். அதை சிறப்பா பண்ணி இருந்தாங்க. முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தின் தமிழ் ரீமேக் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. சந்தோஷம் ஆக இருந்தது. அப்போது அட்டகாசம் படத்தை இயக்கி கொண்டிருந்தேன்.
அஜித், நீங்கள் வசூல்ராஜா இயக்கிட்டு வாங்க அதற்குள் நான் ஜி படத்தை முடிச்சிட்டு வருகிறேன் என விட்டு தந்தார். வசூல்ராஜா படத்தை ஒப்பந்தம் செய்த பத்தாவது நாள் படப்பிடிப்பு தொடங்கி விட்டேன். தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தி 80வது நாள் மக்கள் தியேட்டரில் படத்தை பார்த்தனர். முதலில் வசூல்ராஜா படத்தின் பர்ஸ்ட் காபி பார்த்து எனக்கு சிரிப்பு வரவில்லை, தயாரிப்பாளர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றார்கள். பின்னர் அஜித், ஷாலினி என இருவரையும் படக்குழுவினருக்கு அப்பாற்பட்டு படத்தை பார்த்த நபர்கள் அவர்கள் தான். அஜித், ஷாலினி இருவரும் சிரித்து கொண்டே இருந்தனர். வசூல்ராஜா படத்தை பார்த்த பிறகு நல்லா வந்து இருக்கு ஹிட் ஆகும் என பாராட்டினார்கள் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !