உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கனடாவில் 'துரந்தர் 2' படம் திரையிட்ட தியேட்டர் ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள்

கனடாவில் 'துரந்தர் 2' படம் திரையிட்ட தியேட்டர் ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள்


பாலிவுட்டில் கடந்த டிசம்பர் மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 1300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது என்பதால் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் மார்ச் 19ம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. வெளிநாட்டில் உள்ள ரசிகர்களும் இந்த படத்தைப் பார்க்க ஆவலாக முண்டி அடித்தனர்.

அந்த வகையில் கனடாவில் மான்ட்ரீலில் உள்ள ஒரு திரையரங்கில் முதல் நாள் காட்சியின் போது ஆர்வக்கோளாறு காரணமாக அல்லது தள்ளுமுள்ளு காரணமாகவோ திரையரங்கில் உள்ள திரையின் கீழ் பகுதியை ரசிகர்கள் கிழித்து சேதப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. திரையின் கீழ்பகுதி மட்டுமே கிழிந்திருந்ததால் போலீசாரின் எச்சரிக்கையுடன் மீதி படத்தையும் திரையிட்டனர் தியேட்டர் நிர்வாகத்தினர். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !