தீபாவளியை குறிவைத்த கார்த்தியின் மார்ஷல்
ADDED : 11 hours ago
நடிகர் கார்த்தி தற்போது டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் அவரது 29வது படமாக 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர்கள் குறித்த கதைக் களத்தில் உருவாகிறது. இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பிரபு, லால், ஈஸ்வரி ராவ், ஜான் கொக்கென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், துறையூர் என பல்வேறு பகுதிகளில் நடத்தியுள்ளனர். இந்த படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருவதாக இதன் இயக்குனர் தமிழ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழா மேடையில் உறுதி செய்துள்ளார்.