உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிவின்பாலியின் படம் மறைந்த கேரள முதல்வர் பற்றியதா ? இயக்குனர் விளக்கம்

நிவின்பாலியின் படம் மறைந்த கேரள முதல்வர் பற்றியதா ? இயக்குனர் விளக்கம்

மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வரும் மார்ச் 26ம் தேதி வெளியாக இருக்கும் படம் பிரதிச்சாயா. இந்த படத்தை மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் தான் விஷால், ஹன்சிகா இருவரையும் மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர். தற்போது இவர் இயக்கியுள்ள இந்த பிரதிச்சாயா படம் அரசியல் களத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது, அதேசமயம் இது மறைந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டியை, அவருக்கும் அவரது மகனுக்குமான அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக உருவாகி உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது,

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் கூறும்போது, “இது ஒரு அரசியல் தலைவருக்கும் அவர் மகனுக்கும் இடையேயான கதை தான் என்றாலும் நிஜமான அரசியல் தலைவர்கள் எவரையும் பிரதிபலிக்கும் விதமாக இது உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆவது கூட ஏதேச்சையாக நடந்த ஒன்றுதான். அரசியல் கதை தான் என்றாலும் அதில் ஒரு தந்தை மகன் இருவருக்கான உணர்வு போராட்டத்தை மையப்படுத்தி தான் இது உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !