ஒருவேளை ராம்சரண் படம் வெளியானால்.. ? தில் ராஜு போட்ட கண்டிஷன்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரை வைத்து பெல்லி சூப்புலு என்கிற படத்தை இயக்கியவர் தருண் பாஸ்கர். படங்களை இயக்கிக் கொண்டே இன்னொரு பக்கம் நடிகராகவும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் கதையின் நாயகனாக நடித்துள்ள காயப்பட்ட சிம்ஹம் படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிடுகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தில் ராஜூ இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஒரு கண்டிஷனையும் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அதாவது ஏப்ரல் 30ம் தேதி ராம்சரண் நடித்துள்ள பெத்தி திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த படம் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் தற்போது ஒரு பேச்சு உலா வருகிறது. அதை முன்னிட்டு தான் இந்த காயப்பட்ட சிம்ஹம் படத்தின் ரிலீஸ் தேதியை மே 1ம் தேதி திட்டமிட்டு இருக்கிறேன்.
ஒருவேளை பெத்தி படம் குறித்தபடி ஏப்ரல் 30ம் தேதி வெளியாவது உறுதி என்றால் மே 1ஆம் தேதி காயப்பட்ட சிம்ஹம் படத்தை வெளியிட மாட்டேன். காரணம் திரையரங்குகள் எதிர்பார்த்தபடி கிடைக்காது. ஒரு வாரம் கழித்து தான் இந்த படத்தை திரையிடுவேன். அதனால் இந்த படம் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என பெரிதாக எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று படக்குழுவினருக்கு முன்னெச்சரிக்கையாக கூறியுள்ளார் தில் ராஜூ..