ஹிந்தி பேட்டியில் தமிழில் பேசிய மிருணாள் தாக்கூர் ; மீண்டும் கிளம்பிய யூகங்கள்
நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கில் வெளியான 'சீதாராமம்' படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து 'ஹாய் நானா, தி பேமிலி ஸ்டார்' உள்ளிட்ட படங்கள் கதாநாயகியாக நடித்தவர் தற்போது அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்துள்ள, தெலுங்கு, ஹிந்தி என இரு மொழி படமாக உருவாகியுள்ள 'டகாய்ட் ; எ லவ் ஸ்டோரி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் மிருணாள் தாக்கூர்.
இதுவரை இன்னும் இவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. அதேசமயம் கடந்த சில மாதங்களாகவே நடிகர் தனுஷுடன் இவர் நெருக்கம் காட்டி பழகி வருவதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் கூட பல செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இது குறித்த செய்திகளை மிருணாள் தாக்கூர் பெரும்பாலும் மறுத்து பேசியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது டகாய்ட் படத்தின் ஹிந்தி புரமோஷன் நிகழ்ச்சியாக மும்பையில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் மிருணாள் தாக்கூர் அடிக்கடி தமிழ் வார்த்தைகள் பலவற்றை தான் பேசும்போது உபயோகித்தார். இது அங்கிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
தமிழ் படங்களிலேயே இன்னும் நடிக்க ஒப்புக்கொள்ளாத இவர் தெலுங்கு படத்திற்காக ஹிந்தி பேட்டியின்போது தமிழ் வார்த்தைகளை பேச வேண்டிய அவசியம் என்ன என்றும் அந்த வகையில் அவர் நடிகர் தனுஷுடன் நெருங்கி பழகும் நட்பில் தான் அவரை அறியாமலேயே தமிழ் வார்த்தைகளை பேசியுள்ளார் என்றும் ரசிகர்களிடையே மீண்டும் யூகங்கள் கிளம்பியுள்ளன.