'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம்
தெலுங்கில் நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் 'பெத்தி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும்போது ராம்சரணுக்கு காயம் ஏற்பட்டது. குறிப்பாக அவருக்கு கண்ணில் காயம் பட்டதாக செய்தி வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.
அதே சமயம் படக்குழுவினர் தரப்பிலிருந்து கூறும்போது, ராம்சரணுக்கு காயம் பட்டது என்னவோ உண்மை தான். ஆனால் கண்ணில் அல்ல.. கண்களுக்கு சற்று தள்ளி அவருக்கு காயம் பட்டது. கிட்டத்தட்ட நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன. சிறிய காயம் என்பதால் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதுமட்டுமல்ல ராம்சரண் எந்தவித ஓய்வும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக படப்பிடிப்பிற்கு திரும்பி வந்து மீண்டும் நடித்து வருகிறார் என்று கூறியுள்ளனர்.