உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு'

தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு'


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்துள்ளார் சூர்யா. அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கருப்பு' படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சுமார் 7 கோடிக்கும் அங்கு வியாபாரம் நடந்ததாகச் சொல்லப்பட்டது. தற்போது 20 கோடி வசூலை அப்படம் நெருங்கியுள்ளதாம். சுமார் 3 கோடி லாபத்தை இதுவரை கொடுத்துள்ளது என்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாக தற்போது 15 கோடி லாபம் கிடைத்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். நாளை மே 22 புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் இந்த வாரமும் இப்படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்துவிட்டால் சூர்யா அவருடைய முதலாவது 200 கோடி வசூலை இந்தப் படம் மூலம் பார்ப்பார்.

இப்படத்தின் வெற்றியால் சூர்யாவை வைத்து அடுத்த படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தைத் தயாரித்துள்ள தெலுங்கு தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !