உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா

ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா


'நாடோடிகள், ஈசன், மார்க் ஆண்டனி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அபிநயா. வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி. இப்போது சமுத்தரக்கனி நடிக்கும் 'கார்மேனி செல்வம்' படத்தில் முக்கியமான கேரக்டரில் வருகிறார். தனது சினிமா அனுபவம் குறித்து அவர் பேசுகையில், ''நான் சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்கூட்டரில் செல்லும்போதும் ஐஸ்வர்யா ராய் போஸ்டர் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன். அப்பா அதை நிறைவேற்றினார்.

காது கேட்க முடியாவிட்டாலும், வாய் பேச முடியாவிட்டாலும் சினிமாவில் சிறப்பாக நடிக்க என்னை தயார் படுத்தினேன். எனது 2 அண்ணன்கள், அப்பா உறுதுணையாக இருந்தனர். அடுத்து அப்பா மாதிரி இயக்குனர் சமுத்திரக்கனி என்னை உற்சாகப்படுத்தினார். அதனால், சினிமாவில் பெயர் எடுக்க முடிந்தது. நான் நடிகை ஆக வேண்டும் என்று கனவு கண்டேன், அதை நிறைவேற்ற பலர் உதவினார்கள்'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !