உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன்

கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன்


நடிகர் ரவிமோகன் சில மாதங்களாக மனைவியுடன் சண்டை, விவாகரத்து, கெனிஷா நட்பு என சர்ச்சை செய்திகளில் அடிபட்டு வருகிறார். மறுபக்கம் சொந்த பட நிறுவனம், யோகிபாபுவை வைத்து படம் என்று பிஸியாக இருக்கிறார். அடிக்கடி சினிமா, பொது நிகழ்ச்சிகளிலும் தோழி கெனிஷாவுடன் சுற்றி வருகிறார். மனைவி ஆர்த்தியை கோபப்படுத்த இ்பபடி செய்வதாக கேள்வி. இந்நிலையில், ரவிமோகன் கோவாவில் வீடு, நிலம் வாங்கியிருக்கிறார். அங்கே செட்டில் ஆகப்போகிறார் என்று கூறப்படுகிறது.


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பெற்றோர் வீடு, பின்னர், அடையார் கேட் அருகே தனிக்குடித்தனம், அடுத்து ஈசிஆரில் பெரிய வீடு ஆகியவற்றில் வசித்து வந்தவர், இப்போது தமிழகத்தை விட்டு வெளியே வசிக்க நினைக்கிறார். அஜித், யுவன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் துபாயை தேர்ந்தெடுத்ததுபோல, இவர் கோவாவை செலக்ட் செய்துள்ளார். அதில் கெனிஷாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இனி, அவர் கோவாவில் அதிகம் வசிப்பார். படப்பிடிப்பு, மற்ற வேலைகள் என்றால் சென்னை வந்து செல்வார் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !