உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள்

'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் கடந்த வருடமே வெளியாக வேண்டிய படம். இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படம். ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என கடந்த வாரம் அறிவித்தார்கள். ஆனால், அந்தத் தேதியிலும் படம் வெளியாகாத நிலையே உள்ளது என்பது லேட்டஸ்ட் தகவல்.

அப்படம் ஏப்ரல் 3 என்று சொல்லப்பட்டதால் சரவணன் நடித்த 'லீடர்' படத்தை ஏப்ரல் 9ம் தேதியும், பரத் நடித்த 'காளிதாஸ் 2' படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் அறிவித்தபடி ஏப்ரல் 3 வெளியாகாது என கோலிவுட்டில் உறுதியாக சொல்லப்பட்டுவிட்டது.

எனவே, 'காளிதாஸ் 2, லீடர்' ஆகிய இரண்டு படங்களையும் முன்கூட்டியே ஏப்ரல் 3ம் தேதி வெளியிட உள்ளார்கள். அன்றைய தினத்தில் ஏற்கெனவே, “கார்மேனி செல்வம், கெஸ்ட், மரகத மலை, ரூம் பாய்” ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !