உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன்

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன்


தெலுங்குத் திரையுலகத்தின் இளம் காதல் ஜோடிகளாக கடந்த சில வருடங்களாக பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. கடந்த மாதம் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்காக ஒரு மாத காலத்திற்குப் படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டார்கள். கடந்த வாரம் ராஷ்மிகா மட்டும் அவரது 'மைஸா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் தற்போது ஜோடியாக நடித்து வரும் படம் 'ரணபாலி'. அப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு முன்பாக இருவரும் தற்போது ஹனிமூன் சென்றுள்ளனர். தாய்லாந்து நாட்டில் உள்ள 'கோ சமூய்' என்ற தீவில் இருவரும் உள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.

“திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, ஓரிரு நாட்களுக்கு சற்று நிதானமாக பொழுதைக் கழிக்க நாங்கள் விரும்பினோம். அமைதியான காலைப் பொழுதுகள், மதிய வேளைகளில் நீச்சல், மாலையில் டேபிள் டென்னிஸ் மற்றும் நீர் விளையாட்டுக்கள், அதோடு நீண்ட நேரம் நீடித்த சிரிப்பொலிகளுடன் கூடிய சினிமா இரவுகள்,” என அது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !