உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடாவடி செய்த போட்டியாளர் : மோகன்லால் கொடுத்த அதிரடி தண்டனை

அடாவடி செய்த போட்டியாளர் : மோகன்லால் கொடுத்த அதிரடி தண்டனை

பிக்பாஸ் மலையாளம் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த எட்டு சீசனையுமே மோகன்லால் தான் தொகுத்து வழங்குகிறார். அப்படி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் உடல் ரீதியான மோதல்களில் ஈடுபட்ட சந்தோஷ் ராஜ் என்கிற தாஷி, மோகன்லால் இடம் இந்த வார கண்டனத்திற்கு ஆளானார்.

இனிமேல் அவரை தாஷி என்று யாரும் அழைக்க வேண்டாம் அதற்கு பதிலாக அவர் பெயரில் உள்ள சந்தோஷ் என்றே கூப்பிடுங்கள் என மோகன்லால் வேடிக்கையாக சொன்னார். ஆனாலும் சந்தோஷிற்கான தண்டனையாக அவரை மூன்று வாரம் தொடர்ந்து நேரடி எவிக்சன் நாமினேஷனில் வைத்தார். இது பிக்பாஸ் வரலாற்றில் புதிய விஷயம். இப்படி அடுத்தடுத்து பல அதிரடியான விஷயங்களை மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனிவரும் நாட்களில் பார்க்க முடியும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !