நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள்
வாரந்தோறும் பல மொழி படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. இதற்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள 'முத்து என்கிற காட்டான்' உள்ளிட்ட படம், வெப்தொடர் வெளியாகவுள்ளது.
முத்து என்கிற காட்டான்
இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள தொடர் 'முத்து என்கிற காட்டான்'. இந்த தொடரில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் இர்ஷத் அலி, பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், சிங்கம் புலி, ஆர்.ஜே பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை(மார்ச் 27ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மாய பிம்பம்
புதுமுக இயக்குநர் கே.ஜே. சுந்தர் இயக்கத்தில், புதுமுக நடிகர்கள் ஆகாஷ் நடராஜன், ஜானகி, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ் அருண்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மாய பிம்பம்'. மருத்துவக் கல்லூரி மாணவர், செவிலியர் காதலிக்கும் போது ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு கையாளுகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது போன்ற திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். நல்ல படம் எனப் பாராட்டப்பட்ட இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 27ம் தேதி) வெளியாகவுள்ளது.
ஓ ரோமியோ (ஹிந்தி)
பாலிவுட் இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாஹித் கபூர்-த்ரிப்தி திம்ரி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' ஓ ரோமியோ'. கிரைம் த்ரில்லர் கதையம்சத்தில் வெளியான இந்த திரைப்படம் நாளை(மார்ச் 27ம் தேதி) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மர்தானி 3 (ஹிந்தி)
பாலிவுட் இயக்குநர் அபிராஜ் மினாவாலா இயக்கத்தில் ராணி முகர்ஜியின் அதிரடி ஆக்ஷனில் வெளியான திரைப்படம் 'மர்தானி 3'. கொடூரமான குற்றவாளியைப் பின்தொடரும் பெண் காவல் அதிகாரி இறுதியில் என்ன ஆனார் என்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 27ம் தேதி) வெளியாகவுள்ளது.
ரிட்டர்ன் டு தி ஜுராசிக்
ஹாலிவுட் இயக்குநர்கள் ஜஸ்டின் பென்சன் மற்றும் ஆரோன் மூர்ஹெட் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'ரிட்டன் டு தி ஜூராசிக்'. இந்த படத்தில் சார்லி காக்ஸ், வின்சென்ட் டி 'ஓனோப்ரியோ, கிறிஸ்டன் ரிட்டர், டெபோரா ஆன் வோல் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 27ம் தேதி) வெளியாகவுள்ளது.
மஸ்திஷ்கா மரணம்
மலையாள இயக்குநர் ஆர்.கே கிரிஷாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'மஸ்திஷ்கா மரணம்'. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், திவ்ய பிரபா, ஸ்ரீநாத் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிவியல் புனைக்கதையை த்ரில்லர் பாணியில் இயக்கி இருந்தார். இந்த படம் நாளை(மார்ச் 27ம் தேதி) நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
வள்ளத்து வஷத்தே கள்ளன்
பிரபல மலையாள இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த க்ரைம் த்ரில்லர் படம் 'வள்ளத்து வஷத்தே கள்ளன் (Valathu Vashathe Kallan)'. இந்த படத்தில் பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ், லீனா, கேஆர் கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை(மார்ச் 27ம் தேதி) மனோரமா மேக்ஸ் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மா நானா கதா
தெலுங்கில் வெளியான ரொமான்டிக் திரைப்படமான 'மா நானா கதா' ஈடிவி விண் ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 29ம் தேதி) வெளியாகவுள்ளது.