வாசகர்கள் கருத்துகள் (1)
புஷ்பா 2 டிக்கெட் முதல் மூன்று நாட்கள் 2000 வரை வித்தார்கள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த துரந்தர் படம் 1300 கோடி வசூலித்தது. தற்போது மார்ச் 19 ஆம் தேதி அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இப்படம் திரைக்கு வந்து ஏழு நாட்களில் ஆயிரம் கோடி வசூல் செய்திருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே வெளியான புஷ்பா 2 படம் 7 நாட்களில் 1000 வசூலித்திருந்த நிலையில் தற்போது துரந்தர் 2 அப்படத்தின் வசூலை சமன் செய்துள்ளது. சில ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வெளியான பாகுபலி 2, ஜவான், புஷ்பா 2, கேஜிஎப் 2, கல்கி, ஆர்ஆர்ஆர் என பல படங்கள் 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள நிலையில் இந்த துரந்தர் படத்தின் முதல் பாகம் 1300 கோடி வசூலித்ததை அடுத்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்து கவனம் பெற்றுள்ளது.
புஷ்பா 2 டிக்கெட் முதல் மூன்று நாட்கள் 2000 வரை வித்தார்கள்