உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு

பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு

தனுஷ் தயாரித்து, இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அறிமுகமானவர் பவிஷ் நாராயணன். அதையடுத்து தற்போது மகேஷ் ராஜேந்திரன் என்பவர் இயக்கி உள்ள லவ் ஓ லவ் என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் நாக துர்கா, இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் காதல் கதையில் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில், பவிஷ் நாராயணன், நாக துர்கா இடம் பெற்றுள்ளனர். பாக்ஷன் இசையமைத்துள்ள இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !