உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அதன்பிறகு அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், அரண்மனை 4, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ரவுடி அண்ட் கோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் அவர் நடித்து வந்த தெலுசு கடா என்ற படம் ஏற்கனவே அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், தற்போது பவன் கல்யாணுடன் நடித்து வெளியாகியுள்ள உஸ்தாத் பகத்சிங் படமும் தோல்வியாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக ராஷி கண்ணாவிடத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த இரண்டு புதிய படங்கள் பின்வாங்கி விட்டதாம். இதனால் ஹிந்தி சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !