உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி

முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்துள்ள 'முத்து என்கிற காட்டான்' என்கிற வெப் தொடர், இன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், விஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். இந்த தொடரை காக்கா முட்டை, கடைசி விவசாயி படத்தை இயக்கிய மணிகண்டன் மற்றும் எடிட்டர் அஜித் குமார் இயக்கி உள்ளனர்.

விஜய் சேதுபதி பேசியதாவது : இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான்.

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். 2008 முதல் இப்போது வரை அவரை எனக்கு தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் . மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !