ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா'
ரா கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து மார்ச் 12ம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியான படம் 'மேட் இன் கொரியா'. இப்படம் வெளியான இரண்டு வாரங்களில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து இரண்டு வாரங்களாக உலக அளவில் ஆங்கிலம் அல்லாத மொழிப் படங்களில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்துள்ளது. ஒரு தென்னிந்தியத் திரைப்படம் உலக அளவில் இப்படியான வரவேற்பைப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை என படத்தின் இயக்குனர் ரா கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்திப் படங்களான 'பார்டர் 2, துரந்தர்' ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளி இந்தப் படம் முதலிடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஓடிடியில் புதிய படங்கள் நேரடியாக வெளியாவது மிகவும் குறைந்து போன இந்தக் காலத்தில் ஒரு கதாநாயகி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.