உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி

பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள பெண்டபாடு கிராமத்தில், கண்டலா ராமகோட்டம்மா மற்றும் கண்டலா தாத்தாச்சாரி தம்பதியருக்கு பிறந்தவர் புஷ்பவல்லி. அவர் தனது 9வது வயதில், 1936ம் ஆண்டு, 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் இளம் சீதையாக நடித்து, குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் நுழைந்தார்.

இதைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக மேலும் சில வேடங்களில் நடித்ததால், புஷ்பவல்லியின் வருமானம் அவரது குடும்பத்திற்கு முக்கியமானதாக மாறியது. புஷ்பவல்லி, குழந்தை நட்சத்திரமாக நடிப்பதில் இருந்து பெரிய இடைவெளி எடுக்காமலேயே, வயது வந்தோருக்கான பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். இது ஒரு அவசியமாக இருந்தது, ஏனெனில் நடிப்புதான் குடும்பத்தின் வருமான ஆதாரமாக இருந்தது.

இதனால் வாய்ப்பு கிடைத்த படத்தில் எல்லாம், கிடைத்த கேரக்டரில் எல்லாம் நடித்தார். இதனால் அவரால் முன்னணி நடிகையாக வளர முடியவில்லை. அவர் நாயகியாக நடித்த சில படங்களும் தோல்வி அடைந்தது. ஆரம்ப காலகட்டத்தில் தன் குடும்பத்திற்காக உழைத்தார். அதன்பிறகு ஒரு வழக்கறிஞரை மணந்து கொண்டு அவருக்காக உழைக்க ஆரம்பித்தார். இரண்டு குழந்தைகள் பெற்றிருந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ஒருவரின் ஆதரவு இவருக்கு கிடைத்தது. அவர் மூலம் சில சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் திருமணம் செய்யாமலேயே அவருடன் வாழ்ந்தார். அவர் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். ஆனால் அந்த முன்னணி நடிகரோ இன்னொரு முன்னணி நடிகையை திருமணம் செய்து கொண்டு இவரை கைவிட்டார்.

என்றாலும் கிடைக்கிற வாய்ப்புகளில் நடித்து, தனது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். அந்த முன்னணி நடிகர் இவரை மனைவியாகவோ இவர் மூலம் பெற்ற குழந்தைகளை தனது குழந்தைகளாவோ அங்கீரிக்கவில்லை. ஆனாலும் புஷ்பவல்லி தன் மகளை சினிமாவின் உச்சிக்கு அழைத்துச் சென்றார்.

அந்த முன்னணி நடிகை பாலிவுட் நடிகை ரேகா. ரேகாவின் தந்தை காதல் மன்னன் ஜெமினி கணேசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

Akhila
2026-03-28 03:55:40

Gemini has remained just a flamboyant guy and not true to any of the ladies he was connected with including his wife. Such male personalities are to be rejected by the public no matter what skill he had


SULLAN, chennai
2026-03-27 15:44:09

புஷ்பவல்லி அவர்கள் உண்மையில் ஜெமினி மாமா மீது மிகுந்த மரியாதையும் தீராக்காதலும் கொண்டு இருந்திருக்கிறார் ஜெமினி மாமா உண்மையில் இவரது தியாகத்திற்கு மரியாதையை செய்திருக்க வேண்டும்.


பிம்பிளக்கி பிளாப்பி
2026-03-28 05:55:45

உண்மை என்னவென்றால் புஷ்பவல்லி தன் கணவரை விவாகரத்து செய்யாமல் பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனால் அவரை ஜெமினி கணேசன் திருமணம் செய்யவில்லை. இது திருமணம் கடந்த உறவு என்பதால் சட்டசிக்கலும் இருந்தது.