விரைவில் யூத் பட வெற்றி விழா
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் வெற்றி பெற்றாலும், நன்றி அறிவிப்பு விழா, வெற்றி விழா நடத்துவது வாடிக்கை ஆகிவிட்டது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா நடித்த தாய்கிழவி படத்தின் வெற்றி விழா சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நடந்தது. அதில் படத்தில் நடித்தவர்கள், படக்குழுவினர் பங்கேற்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு விக்ரம்பிரபு நடித்த சிறை படத்தின் 75வது நாள் விழா நடந்தது. அதில் படக்குழுவுக்கு ஷீல்டு வழங்கப்பட்டது. அதற்குமுன்பு அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ் படத்தில் நன்றி அறிவிப்பு விழா நடந்தது. ஜீவா நடித்த தம்பி தலைவர் தலைமையில் படத்துக்கும் பெரியளவில் வெற்றி விழா நடந்தது.
அடுத்ததாக விரைவில் கருணாஸ் மகன் கென் இயக்கி நடித்த யூத் படத்தின் வெற்றி விழா நடக்க உள்ளது. அடுத்த வாரம் நடக்க வாய்ப்பு. இந்த படத்தின் வசூல் 30 கோடியை தாண்டி, நல்ல லாபத்தை கொடுத்துள்ளதால் வெற்றி விழா நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. கென் இயக்கி, நடித்த முதல் படம், தயாரிப்பு நிறுவனத்துக்கும் முதல் படம் என்பதால் இப்படி விழா நடத்தி மகிழ்ச்சியை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன.