உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி

நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி

மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படம் 32 ஆண்டுகளுக்குபின் ஏப்ரல்10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து கஸ்துாரி அளித்த பேட்டி : இன்றைக்கும் என்னை தாயம்மா என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு பேசுகிறார்கள். இப்படி பண்ணலாமா தாயம்மா என்று கிண்டல் அடிக்கிறார்கள். அதற்கு காரணம் அமைதிப்படை தான். அந்த படத்தில் இடம் பெற்ற அல்வா சீனும் வெகு பிரபலம்.

31 ஆண்டுகளுக்குபின் அமைதிப்படை ரீ ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. அந்த படத்தில் பங்கேற்ற பலர் கைலாசம் போய்விட்டார்கள். நடிகை ரஞ்சிதா கைலாசா சென்றுவிட்டார். எனக்கு பகுத்தறிவு ஊட்டிய ஆசான் மணிவண்ணன். நிறைய புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்வார். கடைசியில் புதுமைப்பித்தன் கதை தொகுப்பு கொடுத்தார். மணிவண்ணன் கதை சொல்லமாட்டார். முன்பே டயலாக் கொடுக்க மாட்டார். படப்பிடிப்பு தளத்தில்தான் அனைத்தும் டெவலப் ஆகும். அதற்கு ஏற்ப நாம் நடிப்பில் தயார் ஆகணும். அவர் இயக்கத்தில் நடிப்பது வரம்.

அமைதிப்படை படத்தை ஹிந்தி, ஒரியா, பெங்காலி, சிங்களம் உட்பட பல மொழிகளில் எடுத்தனர். அப்பவே அமைதிப்படை பான் இந்தியா படம். குறிப்பாக, தமிழக அரசியலுடன் நெருக்கமான படமாக இருந்தது. இப்போது கூட அரசியல் விஷயங்களை இந்த படத்தில் ரசிக்கலாம். அமைதிப்படை படத்தில் சீமான், ராசுமதுரவன், செல்வபாரதி, சுந்தர்.சி ஆகியோர் உதவியாளர்களாக பணியாற்றினார்கள். மணிவண்ணன் ஒரு ஆலமரம். பல இயக்குனர்கள், நடிகர்களை உருவாக்கி இருக்கிறார''.

இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !