உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ்

சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ்

தாய் கிழவி படத்தின் வெற்றியால் ஒரு தயாரிப்பாளராக உற்சாகமாக இருக்கும் சிவகார்த்திகேயன், அந்த படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசனின் டைரக்ஷனில் தற்போது சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார் என்று இன்னும் முடிவாகாத நிலையில் சிவகார்த்திகேயனின் தங்கையாக முக்கிய வேடத்தில் நடிகை மாளவிகா மனோஜ் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய பாடங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதையும் முக்கியத்துவம் வாய்ந்த சிவகார்த்திகேயனின் தங்கை கதாபாத்திரமும் மாளவிகாவை ரொம்பவே இம்ப்ரஸ் செய்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !